ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மெஹ்சானா - பதிண்டா - குர்தாஸ்பூர் எரிவாயு குழாய், அபு சாலையில் உள்ள எச்பிசிஎல் எல்பிஜி ஆலை, ரயில்வே மற்றும் சாலை திட்டங்கள், நாத்வாராவில் சுற்றுலா வசதிகள் மற்றும் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார்.
0 Comments