சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், 'ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில், தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு, பாராட்டு விழா நடந்தது.
பெருமைவிழாவில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை; திருவனந்தபுரம் நீர் உந்து அமைப்பு மையத்தின் இயக்குனர் நாராயணன்; ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜராஜன், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் சங்கரன்; மகேந்திரகிரி உந்துவிசை வளாக இயக்குனர் ஆசிர் பாக்கியராஜ், சந்திரயான் - 2' திட்ட இயக்குனர் வனிதா; ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி; 'சந்திரயான் - 3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு, முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.
0 Comments