பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பின், அங்கு ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். வைர வியாபாரத்தில் உலகின் சிறந்த இடமாக சூரத் நகரை மாற்றும் வகையில் பாதுகாப்பு உட்பட பல சிறப்பு அம்சங்களுடன் ட்ரீம் சிட்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் புபேந்திர படேல், ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜோர்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சூரத் பயணத்தை முடித்துக் கொண்டு, பாவ்நகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கும் காரில் பயணம் செய்தபடி மக்களை சந்தித்தார். அதன்பின், அங்கு ரூ.5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பாவ்நகர் துறைமுகம் அருகே உலகின் முதல் இயற்கை எரிவாயு முனையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இது அரசு மற்றும் தனியார் துறை மூலம் ரூ.4,000 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. குஜராத் பாவ்நகர் துறைமுகம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் சரக்குகளை கையாள்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.
0 Comments