சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்.
அவர் கடந்த 21ம் தேதி ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவியேற்றார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க கூடியது.
இக்கூட்டத்தில் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.முரளிதரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவியேற்பார்.
0 Comments