Recent Post

6/recent/ticker-posts

ஆசிய கடலோர காவல்படை முகமைகளின் 18வது தலைவர்கள் கூட்டம் / 18th Meeting of Heads of Asian Coast Guard Agencies

  • இந்திய கடலோர காவல்படை, ஆசிய கடலோர காவல்படை முகமைகளின் செயலகத்துடன் இணைந்து 18வது கூட்டத்தை வரும் 18ந்தேதி வரை நடத்துகிறது. 
  • 18 நாடுகள் மற்றும் இரண்டு சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 55 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். ஆசிய கடலோர காவல்படை முகமை என்பது 23 நாடுகளின் பன்னாட்டு மன்றமாகும். 
  • ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பங்களாதேஷ், புருனே, கம்போடியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், தென் கொரியா, லாவோ, மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, துருக்கி, வியட்நாம், ஹாங்காங் ஆகியவற்றுடன் கூடுதலாக, இரண்டு சர்வதேச நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 2004 இல் டோக்கியோவில் ஜப்பான் கடலோர காவல்படையால் 1வது கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிய கடலோர காவல்படை முகமைகளின் அனைத்து தலைவர்களும் கூடும் ஒரே மன்றம் இதுதான்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் திறந்த, சுதந்திரமான மற்றும் விதி அடிப்படையிலான கடல் எல்லைகள் இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 
  • புதுதில்லியில் இன்று நடந்த ஆசிய கடலோர காவல்படை முகமைகளின் 18வது தலைவர்கள் கூட்டத்தில் அவர் தொடக்க உரையாற்றினார். 
  • வரலாறு முழுவதும், அந்நிய நிலத்தை ஒருபோதும் ஆக்கிரமிக்காத அமைதியை விரும்பும் நாடாக இந்தியா உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். மற்ற நாடுகளின் உலகளாவிய மனித விழுமியங்களையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் எப்போதும் மதித்து, அவர்களை சம பங்காளிகளாகக் கருதுவதுடன், சுற்றுச்சூழலுக்கு நிலையான வழியில் அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக கடல் வெளி உலகளாவிய பொதுவானதாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  • "இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான , சுதந்திரமான, விதி அடிப்படையிலான கடல் எல்லைகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் நிற்கிறோம். 
  • இதில் எந்த நாடும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உலகளாவிய பொதுவானவற்றைப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களை அதன் நியாயமான பயன்பாட்டிலிருந்து விலக்கவோ அனுமதிக்க முடியாது. 
  • இந்த முயற்சியை நோக்கி பல்வேறு மன்றங்களில் ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கூட்டாளி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
  • இந்தியாவின் பகிரப்பட்ட பார்வையான 'சாகர்' (பிராந்தியத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி), நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் 'கடலில் விதி அடிப்படையிலான ஒழுங்கு' ஆகியவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த ஒத்துழைப்புக்கான இந்திய அணுகுமுறையை நிறைவு செய்கின்றன என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். 
  • நீலப் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் கவனத்தை அவர் விளக்கினார். பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட வாழ்வாதாரங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  • கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்றுதல்; நாடுகளுடன் கூட்டுறவு வழிமுறையை நிறுவுதல் மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளின் திறனை வளர்ப்பதில் ஈடுபடுதல் ஆகியவற்றில் சர்வதேச விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்காக திரு ராஜ்நாத் சிங் குரல் கொடுத்தார். 
  • ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதக் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களின் செயல்திறனால் இந்தியா ஊக்குவிக்கப்படுகிறது என்றும், கடலில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பரஸ்பர ஒத்துழைப்பை மட்டுமே மிகவும் பயனுள்ள வழியாகக் கருதுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். அத்தகைய ஒத்துழைப்பு வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
  • கடல்சார் பாதுகாப்பிற்கான சவால்களை சமாளிக்க கடல்சார் நாடுகளிடையே பயனுள்ள ஒத்துழைப்பை பாதுகாப்பு துறை அமைச்சர் வலியுறுத்தினார். 
  • கடல் போக்குவரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், கடல் மாசுபாட்டின் சாத்தியமான ஆபத்து மற்றும் தேவையற்ற கடல்சார் சம்பவங்களின் விளைவாக தேடுதல் மற்றும் மீட்பு தேவை ஆகியவை பன்மடங்கு அதிகரித்துள்ளன. சமீபத்திய எண்ணெய் கசிவு சம்பவங்கள் கடல் சுற்றுச்சூழல், கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. 
  • சட்டவிரோதமான அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் நீண்ட கால கடல் நிலைத்தன்மையை அச்சுறுத்தி வருகிறது. 
  • கடல் வழிகள் மூலம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் ஆகியவை கடல்சார் சட்ட அமலாக்கத்தை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளதாக கூறிய அவர், அச்சுறுத்தல்களுக்கு எதிரான வெற்றிகரமான பதில் உத்தி காலத்தின் தேவை என்றார்.
  • கடல் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர காவல் படைகளின் பங்கை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். கடலோர காவல்படை முகமைகள் ஒரு தனித்துவமான திறனையும் செயல்பாட்டையும் கொண்டுள்ளன. 
  • அந்தந்த தேசிய கடற்படைகளின் திறன்களை முழுமையாக்குவதற்கும், பாதுகாப்பான கடல் சூழலை உறுதி செய்வதற்கும் முகமை நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel