Recent Post

6/recent/ticker-posts

செப்டம்பர் 2022 மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.47 லட்சம் கோடி / GST collection for the month of September 2022 is Rs.1.47 lakh crore

  • கொரோனா பாதிப்புகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
  • இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் விடுத்த அறிக்கையில், '2022 செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 686 கோடியை எட்டி உள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வசூலான ரூ.1.17 லட்சம் கோடியை விட 26 சதவீதம் அதிகமாகும். 
  • ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 கோடியும் வசூலாகி உள்ளது. 
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடி ஆகும். இதில், சரக்கு இறக்குமதி மூலம் ரூ.41,215 கோடி வசூலாகி உள்ளது. செஸ் வரியாக ரூ.10,317 கோடி வசூலாகி உள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel