இந்தியாவில் புவிசார் குறியீடுக்கான பதிவகம், சென்னையில்தான் உள்ளது. நாட்டில் இதுவரை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருது வழங்க, இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் சார்பில் 'ஆன்லைன்' மூலமாக வாக்கெடுப்பு நடந்தது.
இதில், தமிழகத்தின் தஞ்சாவூர் தட்டு அதிக ஓட்டுகள் பெற்று, கைவினைப் பொருட்கள் பிரிவில் விருதுக்கு தேர்வு பெற்றது.
தெலங்கானாவின் பிரபலமான அசைவ உணவுப் பொருளான ஹைதராபாத் ஹலீம் உணவுப் பொருள் பிரிவிலும், வேளாண் பொருட்களில், ஒடிஷாவின் கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினரால் பயிரிடப்படும் கந்தமால் மஞ்சள், உற்பத்திப் பொருட்கள் பிரிவில், கர்நாடகா மாநிலத்தின் மைசூரு சந்தன சோப்பு, இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் பிரிவில், வாரணாசி பகுதியில் கிடைக்கும் ஒரு வித சிவப்புக்கல்லும் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளன.
0 Comments