- ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமிதா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் யிங் சென்னை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- அதே பிரிவில் மற்றொரு இந்தியரான திலோத்தமா சென் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- 50 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களையும் வென்று இந்திய மகளிர் அசத்தினர். திவ்யான்ஷி முதலிடமும் (547), வர்ஷா சிங் 2-ஆம் இடமும் (539), தியானா 3-ஆம் இடமும் (523) பிடித்தனர்.
- 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் 573-575 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியாவ் ஜியாருய்ஸýவானிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றார்.
- 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் விஜய்வீர் சித்து 574 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
- முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ஈஷா சிங், சிகா நர்வால், வர்ஷா சிங் ஆகியோர் கூட்டணி 16-6 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவை வென்றது.
- ஏர் ரைஃபிள் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ரமிதா, நான்சி, திலோத்தமா சென் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-2 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றியது.
- ஏர் ரைஃபிள் ஜூனியர் ஆடவர் அணிகள் பிரிவிலும் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்ரீகார்த்திக் சபரிராஜ் ரவிசங்கர், விதித் ஜெயின் அடங்கிய அணி இறுதிச்சுற்றில் 17-11 என சீனாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
- நாளில் இறுதியாக, 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகளில் இந்தியாவின் பாயல் கத்ரி, ஆதர்ஷ் சிங் ஜோடி 17-9 என்ற புள்ளிகள் கணக்கில் சீன இணையை வென்று பதக்கத்தை தட்டிச் சென்றது.
- இதே பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான சமீர், தேஜஸ்வினி 16-2 என்ற கணக்கில் சீன கூட்டணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
- இதில் சமீருக்கு இப்போட்டியில் இது 2-ஆவது வெண்கலப் பதக்கமாகும். பதக்கப் பட்டியல்: தற்போதைய நிலையில் இந்தியா, 10 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
0 Comments