Recent Post

6/recent/ticker-posts

பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் / 22000 CRORES SUBSIDY FOR PUBLIC SECTOR OIL COMPANIES

  • 3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது என்ற பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் யோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  
  • இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
  • வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்து, இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவு தந்து தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான  உறுதிப்பாட்டை தொடர இந்த ஒப்புதல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும்.
  • ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகிய பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel