Recent Post

6/recent/ticker-posts

உத்தராகண்ட் மாநிலம் மனாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவடத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / PM lays foundation stone for Rs 3400 crore road and cable projects in Mana, Uttarakhand

  • உத்தராகண்ட் மாநிலம் மானாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவட ஊர்தித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாகபிரதமர் கேதார்நாத் சென்று ஸ்ரீ கேதார்நாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். 
  • அவர் ஆதி குரு சங்கராச்சாரியார் சமாதிக்கு சென்று மந்தாகினி அஸ்தபத் மற்றும் சரஸ்வதி அஸ்தபத் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். 
  • பிரதமர் பத்ரிநாத் சென்று ஸ்ரீ பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார். பின்னர் அலக்நந்தா நதிக்கரையோரம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்சிவாலயங்களில் தரிசனம் மற்றும் பூஜை செய்த பின்னர் தனது ஆனந்த உணர்வை வெளிப்படுத்தினார். "என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது
  • மனம் மகிழ்ச்சியடைந்ததுஇந்தத் தருணங்கள் உயிர்ப்புடன் மாறியுள்ளன" என்று அவர் கூறினார்.  இந்த தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்திற்கு சொந்தமானது என்று தனது முந்தைய பயணத்தின் போது பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர்பாபா கேதார் மற்றும் பத்ரி விஷால் அந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பார்கள் என்று முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். 
  • "இன்றுஇந்த புதிய திட்டங்களுடன் அதே உறுதியை மீண்டும் வலியுறுத்த நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்"என்று அவர் கூறினார்.
  • கேதார்நாத் முதல் கௌரிகுண்ட் மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே ஆகிய இரண்டு கம்பிவடப் பாதைகளைக் குறிப்பிட்ட பிரதமர்பாபா கேதார்நாத்பத்ரி விஷால் மற்றும் சீக்கிய குருக்களின் ஆசீர்வாதமே முன்னேற்றத்திற்கு காரணம் என்றார். 
  • உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் முன்னெப்போதும் இல்லாத இந்த முன் முயற்சி நிறைவடையும் போது மகிழ்ச்சி அடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.
  • கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் மாநிலத்தின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த நம்பிக்கையை பெறுவதற்கு பாபா கேதார், பத்ரி விஷாலிடமிருந்து ஆசிகளைக் கோர நான் இங்கே வந்திருக்கிறேன் என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
  • உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற ஜெனரல் குர்மித் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தீரத் சிங் ராவத், உத்தராகண்ட் அமைச்சர் திரு தன்சிங் ராவத், பிஜேபி மாநிலத்தலைவர் திரு மகேந்திர பட் உள்ளிட்டோர் இந்நிகழ்வில், பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel