Recent Post

6/recent/ticker-posts

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் 45 நாளில் பதவி விலகினார் / BRITAIN PM LIZ TRUSS RESIGNED

  • ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். 
  • அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டனர். 
  • இதில் வென்று நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார்.அவர் பதவியேற்ற சில நாட்களில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தார்.
  • இரங்கல் நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளால், பிரதமர் லிஸ் டிரஸ் பெரிய அளவில் எந்தப் பணிகளையும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • தலைவர் பதவிக்கான தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வரிச் சலுகைகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றன.ஆனால், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
  • பங்குச் சந்தை சரிவு போன்றவற்றால், பிரிட்டன் பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, கவாசி குவார்தெங்க் நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார்.
  • இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளையும் ஹண்ட் ரத்து செய்து அறிவித்தார்.
  • இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.இந்நிலையில், இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர், சுயெல்லா பிரேவர்மேன் தன் பதவியை ராஜினாமா செய்தார். 
  • இது பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், லிஸ் டிரஸ் கூறியதாவது:கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில் நான் தவறிவிட்டேன்.
  • இந்த நிலையில், என் பதவியைத் தொடர விரும்பவில்லை.இது குறித்து மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து என் முடிவை தெரிவித்தேன். மேலும், கட்சியில் தலைவர் தேர்தலை நடத்தும் பிரிவின் தலைவர் சர் கிரஹாம் பார்டியையும் சந்தித்து பேசினேன்
  • நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய தலைவரை அடுத்த வார இறுதிக்குள் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இந்தப் பதவியில் இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
  • கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், 45 நாட்களில் தன் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை லிஸ் டிரஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் பல குழப்பங்கள் உள்ளன.
  • கட்சித் தலைவர் தேர்தலில் லிஸ் டிரஸ்சிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்கை தலைவராக தேர்ந்தெடுக்க பல எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
  • பழமைவாதக் கட்சியை சேர்ந்தவரும், நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியவருமான சுயெல்லா பிரேவர்மேன் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. 
  • இதற்கிடையே போரிஸ் ஜான்சனை மீண்டும் தலைவராக்கும்படி, அவருடைய ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் பார்லிமென்டுக்கு புதிதாக தேர்தலை நடத்தும்படி எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel