குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராடில் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / PM lays foundation stone for projects worth Rs.8000 crore at Tharad in Banaskantha district
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தராடில் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.10.2022) அடிக்கல் நாட்டினார்.
மோர்பியில் நேற்று ஏற்பட்ட சோக சம்பவத்தில் பலர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த தேசமும் வருந்தத்தில் ஆழ்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த சோகமான தருணத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் இருக்கிறோம். உதவிப் பணிகளில் முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும் முழு மனதோடு ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு பணியும் தேசத்தின், குஜராத்தின் பெருமையை அதிகரிக்கிறது, இது இரட்டை எஞ்சின் அரசின் உறுதிப்பாடாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதில்தான் நமது பலம் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு பிரபாத்பாய் படேல், திரு பரத்சிங் தாபி, திரு தினேஷ்பாய் அனவைத்யா, குஜராத் அமைச்சர் திரு ருஷிகேஷ் படேல், திரு ஜித்துபாய் சவுத்ரி, க்ரித்சிங் வஹேலா, திரு கஜேந்திர சிங் பார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments