- ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.
- உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
பெயர்க்காரணம்
- இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டதட்ட ஒரே பொருளுடனும், உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் ஆகும்.
வரலாறு
- இந்த திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் எனப்படும் சமூக பாதுகாப்பு எண் திட்டம் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பெப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
உள்ளீடு செய்யப்படும் தகவல்கள்
- கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும். 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.
தகவல் பாதுகாப்பு
- மக்களிடம் திரட்டப்படும் தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். பெரும்பாலும் உள்ளூர் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகத் தகவல்கள் திரட்ட திட்டமிடப்பட்டிருகிறது.
- தகவல்கள் முதலில் "ஆஃப்லைன்"இல் உள்ளீடு செய்யப்பட்டு பிற சங்கேத மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு மத்திய தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. எனவே தகவல் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
- இந்திய அரசு 21 ஜூன் 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் மாநில அரசுகள் சாதி, மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிட்டுள்ளது.
ENGLISH
- Aadhaar is a 12-digit identification number issued to a person who has resided in India for at least 182 days. In India, the world's second largest populous country, the first objective of the Aadhaar identification number system was to create a nationwide citizen database by assigning a unique identification number to all citizens of the country.
Name reason
- Aadhaar came about because the word Aadhaar has almost the same meaning and is easy to pronounce in a few languages spoken by people in India. Aadhaar means evidence.
History
- The precursor to this program is the Social Security Number program known as SSN, which is provided to citizens of the United States of America. The project in India was launched in February 2009 under the leadership of Nandan Neilkeni.
Information to be entered
- Biometrics such as retina and fingerprint are entered along with name, address, other personal information and statistics. Designed to be completely unique from other ID cards. A 12-digit number will be issued as an engraved card. A 12 digit number once assigned to a person is his for life. The number will not be given to anyone else.
Information security
- Information collected from the public will be kept strictly confidential. Information collection is often planned through local post offices. Information is first entered "offline" and converted into other Sanskrit languages and sent to a central database.
- Hence information leakage is ensured. In a notification issued by the Government of India on 21 June 2016, the State Governments have been directed to link the Aadhaar number with caste and domicile proofs.
0 Comments