அம்மா குடிநீர் என்பது தமிழ்நாட்டின் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் ரூ.10–க்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டர் (அம்மா குடிநீர்) விற்பனை செய்யும் திட்டம் ஆகும். கா. ந. அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் 15-ந்தேதி முதல்வர் செயலலிதாவால் தொடங்கப்பட்டது.
அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.10.5 கோடியில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர் உற்பத்தி நிலையம், 2.47 ஏக்கர் பரப்பில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம், கும்மிடிப்பூண்டியில் அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
0 Comments