Recent Post

6/recent/ticker-posts

ஆப்கனுடன் வணிகம் செய்த பண்டை தமிழர்கள் / ANCIENT TAMILANS TRADED WITH AFGHANS

  • உலகிலேயே மிகவும் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றாகத் தமிழர் நாகரீகம் இருக்கிறது. பழந்தமிழர்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
  • இந்தாண்டு கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக அகழாய்வு பணிகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
ஆப்கன்
  • அதன்படி வைப்பாற்றின் கரையோரம் வடக்கே அமைந்த வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 
  • இதனிடையே அங்கு கண்டறியப்பட்டுள்ள கார்னீலியன் மணிகள் ஆப்கானிஸ்தானுடனான நமது வர்த்தக தொடர்பு பற்றிய புது தகவல்களைக் கண்டறிய உதவுவதாக உள்ளது. இந்த கார்னீலியன் மணிகள் பொதுவாக ஆப்கானிஸ்தானில் தான் கண்டறியப்படும்.
கார்னீலியன் மணிகள்
  • அங்கிருந்து இதை இறக்குமதி செய்து வளையல்களை அலங்கரிக்கப் பயன்படுத்தி இருக்கலாம் என்று வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். 
  • ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இங்கு தான் வளையல்கள் அதிகம் செய்யப்பட்டன. இங்குக் கண்டறியப்பட்ட செப்பு நாணயங்களும் ஆப்கன் உடனான வர்த்தகத்திற்கு அடையாளமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வணிக முத்திரை
  • அவர் மேலும் கூறுகையில், "அந்த இடத்தில் இருந்து பல வணிக முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில முத்திரைகளில் வெறும் ஒரு புள்ளியும், சில முத்திரையில் ஆறு புள்ளிகளும், சிலவற்றில் குறிப்பிட்ட டிசைன்களும் உள்ளன. 
  • இப்படி பல்வேறு முத்திரைகள் இருப்பதால், அங்கு வெவ்வேறு குழுக்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு முத்திரைகள் இருந்திருக்கலாம்.
அகழாய்வு
  • இங்குக் கண்டறியப்பட்டுள்ள வளையல்கள் பல்வேறு நிலைகளில் கண்டறியப்பட்டு உள்ளன. அதாவது வளையங்களில் அலங்கார வேலைகள் மட்டுமே இங்கு நடந்து உள்ளன. முழு வளையல் இங்கே செய்யப்படவில்லை. 
  • மணிகள் வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இருக்கலாம். அதேபோல வளையல் தயாரிக்கும் பணிகளும் வேறு இடத்தில் நடந்து இருக்கலாம். நல்ல வளையல்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், மற்ற உடைந்த வளையல்கள் தான் அகழ்வில் மீட்கப்பட்டு இருக்கிறது.
நிறங்கள்
  • வளையல்களின் அலங்கார வேலைகள் கையால் செய்யப்பட்டு உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மூலம் சில வளையல்களுக்குச் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. அவர்கள் இந்தளவுக்குத் துல்லியமாகச் செய்ய நிறையப் பொறுமை தேவை. 
  • கவனமாக அதைச் செய்துள்ளனர். தூத்துக்குடியில் இவை சேகரிக்கப்பட்டு, வேறு ஒரு இடத்தில் வளையலாக மாற்றப்பட்டு, கடைசியில் அலங்காரப்படுத்தவே அங்கு எடுத்து வரப்பட்டு இருக்கிறது.
ங்கத் தோடு
  • அதேபோல இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பொருட்களை வைத்துப் பார்க்கும் போது, அவர்கள் ஓய்வு நேரத்தில் பாண்டி உள்ளிட்ட விளையாட்டுகளை மக்கள் விளையாடி உள்ளது தெரிகிறது. 
  • 16 இடங்களில் தீ மூலம் எதோ செய்துள்ளதற்கான சான்றும் கிடைத்து உள்ளது. மேலும், மூன்று தந்தம் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்கத் தோடும் கண்டறியப்பட்டு உள்ளது. இதைப் பணக்காரர் அணிந்து இருப்பார்கள்
என்ன காலம்
  • இதன் மூலம் செல்வந்தர்களே இந்தப் பகுதியில் வாழ்ந்து உள்ளதும் தெரிகிறது. அதேநேரம் இவை எல்லாம் எந்த காலத்தைச் சேர்ந்தது என்று இப்போது நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியாது. 
  • கார்பன் டேட்டிங் செய்த பின்னரே கலைப்பொருட்கள் காலத்தைச் சரியாகக் கூற முடியும்" என்று அவர் தெரிவித்தார். இந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்களில் சுமார் 60% ஷெல் வளையல்களாக இருந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
3,254 பழங்கால பொருட்கள்
  • இந்த அகழாய்வை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 16இல் தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு செப்டம்பர் 30ஆம் தேதி தேதி நிறைவடைந்தது. 
  • இந்த ஆய்வில் மொத்தம் 16 அகழிகள் தோண்டப்பட்டது. இதில் மொத்தம் 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, 
  • அவற்றில் 60 சதவீதம் தொல்பொருள்கள் ஷெல் வளையல்களாக இருந்த நிலையில், மணிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களைக் கொண்ட வணிக சின்னங்களும் பழங்கால தந்தம் பதக்கங்கள் கண்டறியப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel