TAMIL
- தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.
- இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது
- தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
- வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
- திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.
- தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
- பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
- வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
- திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கப்படும்.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- மாவட்ட சமூகநல அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறார்.
ENGLISH
- The Government of Tamil Nadu is implementing a bifurcated financial assistance scheme with the aim of helping people who are getting married through the Dr. Muthulakshmi Reddy Memorial Intermarriage Assistance Scheme.
- The scheme was earlier implemented in the name of Anjugam Ammaiyar Mixed Marriage Funding Scheme
- This scheme is implemented by the Government of Tamil Nadu to provide financial assistance to those who marry someone belonging to the lower castes.
- One of the married couple must belong to a lower caste.
- Female should be above 20 years of age.
- There is no income ceiling.
- Application must be made within two years from the date of marriage.
- 20000 will be given. Out of which Rs 10000 will be given as National Savings Bond and Rs 10000 as cheque.
- This scheme is implemented by the Government of Tamil Nadu as a form of financial assistance to the upper castes who marry a backward or very backward caste.
- One of the married couple must belong to a backward or very backward class and the other must belong to an advanced class.
- Female should be above 20 years of age.
- There is no income ceiling.
- Application must be made within two years from the date of marriage.
- 10000 will be given. Out of which Rs 7000 will be given as National Savings Bond and Rs 3000 as cheque.
- Apply at the office of the District Social Welfare Officer in the District Collector's Office by getting the necessary application forms and filling them with the necessary attachments.
- The District Social Welfare Officer examines these application forms and awards specific scholarships.
0 Comments