Recent Post

6/recent/ticker-posts

மின்காந்த பீரங்கிகள் சோதனை வெற்றி / ELECTRO MAGNET CANNONS TEST SUCCESS

  • 'எலக்ட்ரோ மேக்னடிக் ரயில்கன் (இஎம்ஆர்ஜி)' என்ற சிறிய ரக மின்காந்த பீரங்கிகளை ராணுவத்தின் முப்படைகளின் பயன்பாட்டுக்காக டிஆர்டிஓ தயாரித்துள்ளது.
  • போர்கப்பல்கள் அனைத்திலும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த இஎம்ஆர்ஜி பொருத்தப்பட்டிருக்கும். இதன் குண்டுகள் மணிக்கு 4,500 மைல் வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்தவை. 
  • இதில் பயன்படுத்தப்படும் குண்டுகள் லேசர்கள் மற்றும் இயக்க ஆற்றல் மூலம் அதிவேகத்தில் சென்று தாக்கும். இஎம்ஆர்ஜி ரக பீரங்கிகளை தயாரித்துள்ள டிஆர்டிஓ அதில் 12 எம்.எம் குண்டுகளை வைத்து தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.
  • இந்த குண்டுகள் சுமார் 200 கி.மீ தூரமுள்ள இலக்குகளை, அதிவேகத்தில் சென்றும் தாக்கும் திறன் படைத்தவை. அடுத்ததாக 30 எம்.எம் குண்டுகளை பயன்படுத்தி டிஆர்டிஓ சோதனை செய்யவுள்ளது. 
  • 10 மெகாஜோல்ஸ் திறனுடன் டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இஎம்ஆர்ஜி பீரங்கிகள் ஒரு கிலோ கிராம் குண்டுகளை வினாடிக்கு 2,000 மீட்டர் வேகத்தில் சுடும் திறன் படைத்தவை.
  • மின்காந்த சக்தியில் இயங்கும் இதன் குண்டுகள், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்று தாக்கும். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த இஎம்ஆர்ஜி பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel