Recent Post

6/recent/ticker-posts

இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு / FREE TAMILNADU MID DAY MEALS SCHEME

  • இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.
திட்டத்திற்கான காரணங்கள்
  • வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
வரலாறு
  • நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது. 
  • 1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. 
  • அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். 
  • பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். 
  • அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel