TAMIL
- கங்கை செயல்திட்டம் (Ganga Action Plan GAP) என்பது கங்கை ஆற்றினைத் சுத்தப்படுத்துவதற்காக 1986 இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட திட்டம்.
- இத்திட்டத்தின்கீழ் 9017 மில்லியன் ரூபாய் செலவு செய்த பின்னரும்கூட கங்கையை மாசற்றதாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்கள் வெற்றியடையவில்லை. அதனால் மார்ச் 31, 2000 இல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
- கங்கை நதி நீரினைத் தூய்மைப்படுத்தும் திட்டமாகப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐநாவின் யு.என்.இ.பி துணையுடன் உருவானதாகும்.
- மாசுச் சுமையைக் குறைத்து, சுயபராமரிப்பின் கீழ் சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தோற்றுவித்துக் கங்கை நீரின் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- ஏற்கனவே உள்ள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பித்தல்
- சாக்கடை நீரைக் குறுக்கிட்டுத் தடுக்கும் சாதனங்கள் மற்றும் சாக்கடைக் குழாய்களை அமைத்தல்
- ஏற்கனவே உள்ள முக்கிய சாக்கடை நீர்க் குழாய்களைப் புதுப்பித்தல்
- கங்கை நதிக்குள் விடப்பட்ட எடுக்கப்படாத மனிதச் சடலங்கள் மற்றும் கால்நடைச் சடலங்களை நீர் வாழ் முதலைகளும் ஆமைகளும், உணவாக்கி கொள்ளும் விதத்தில் உயிரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- குறைந்த செலவில் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல்
- குறுமணல் குவிப்பு, மணல் அரிப்பைத் தடுக்கும் விதமாக நதியோரங்களில் கட்டடங்கள் கட்டுதல், காடுகள் வளர்த்தல்
- முறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பு நல்கி தொழிலக மாசினை கட்டுப்படுத்துதல்
- குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நதிநீரின் தரத்தினை மதிப்பீடு செய்தல்
- UASB ( Upflow Anacrobic Sludge Blanket) தொழில்நுட்ப உதவியுடன் சாக்கடை நீரைச் சுத்திகரித்தல்.
- யமுனை, கோமதி, தாமோதர் போன்ற கங்கை நதியின் மூன்று துணை நதிகளைத் தூய்மைப்படுத்துதல்
- முதல் கட்டத்தில் நிறைவுபெறாத திட்டங்களைப் பூர்த்தி செய்தல்.
- நதி நீர்த் தரச் சோதனை நிலையங்களை ஏற்படுத்துதல்.
- முதல் கட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு ரூ 342.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டமிடப்பட்ட 261 திட்டங்களில் 237 மட்டுமே முழுமை செய்யப்பட்டன. எனினும் இத்திட்டம் தோல்வி தழுவியது.
- இத்திட்டத்தினால் கங்கை நதித் தூய்மையோ சாக்கடைக் கலப்புக் குறைப்போ நிகழவில்லை. செலவழித்ததும் பலன் இல்லை என்பதால் இரண்டாம் கட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 421 கோடியை வழங்க உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
- நேர்மையற்ற அதிகாரிகள், மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மை, மின் சக்தி விநியோகத்தில் ஒழுங்கற்ற தன்மை, நாளும் பெருகும் சாக்கடை நீர் வரத்து முதலிய காரணங்களால் இத்திட்டம் தோல்வியடைந்தது.
- Ganga Action Plan (GAP) is a program launched by the then Prime Minister Rajiv Gandhi in 1986 to clean up the river Ganga. Even after spending 9017 million rupees under this scheme, the efforts taken to clean the Ganges have not been successful. So the project was abandoned on March 31, 2000.
- The Ganga river water purification project was developed with the support of UNEP at a cost of several crores of rupees.
- The main objective of the project is to reduce the pollution load and improve the quality of Ganga water by setting up self-maintenance sewage treatment plants.
- Upgradation of existing sewage treatment plants
- Installation of sewage interceptors and sewer pipes
- Renovation of existing main sewerage pipes
- To carry out bio-security measures such that aquatic crocodiles and turtles feed on uncollected human carcasses and cattle carcasses left in the river Ganga.
- Establish basic health facilities at low cost
- Accumulation of short sand, construction of buildings on river banks, afforestation to prevent sand erosion
- Controlling industrial machinery in full cooperation with regulatory bodies
- Assessment of river water quality at regular intervals
- Sewage water treatment using UASB (Upflow Anacrobic Sludge Blanket) technology.
- Purification of three tributaries of river Ganges namely Yamuna, Gomati and Damodar
- Completion of unfinished projects in the first phase.
- Setting up of river water quality testing stations.
- An allocation of Rs 342.49 crore has been made for implementation of the first phase. Only 237 of the planned 261 projects were completed. However, this plan failed.
- The project did not result in cleaning of the Ganges or reduction of sewage mix. The Supreme Court banned the disbursement of Rs 421 crore allocated for the second phase as there was no benefit to be spent.
- The scheme failed due to dishonest officials, irresponsibility of the state governments, irregularity in power supply, increasing sewage water inflows, etc.
0 Comments