Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம் / INDIA'S FIRST DEVANG WILDLIFE SANCTUARY


TAMIL
  • தேவாங்கு, இரவு நேர பாலூட்டி வகையைச் சோந்தவை. அளவில் சிறியதாக இருக்கும் அவை, மரவகை இனத்தைச் சோந்தது. இந்த இனம் பயிா்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
  • இதனால், சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சா்வதேச மையமானது தேவாங்கை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைத்துள்ளது. 
  • இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் அவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தணித்தல் ஆகியவற்றின் மூலம் தேவாங்கு இனத்தின் எண்ணிக்கையை பெருக்க இயலும். 
  • அழிந்து வரும் தேவாங்குகள் இனத்தைப் பாதுகாக்கும் வகையில், கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் 11, 806 ஹெக்டோ பரப்பிலான வனப்பகுதிகள் அவற்றின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணா்ந்த தமிழக அரசு, இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம் கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தது. 
  • இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், கரூா், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 ஆயிரத்து 806.56 ஹெக்டோ பரப்பிலான நிலத்தை கடவூா் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது. 
புதிய வாழ்விடங்கள்
  • தேவாங்கைப் போன்று, வேறு பல அழிந்து வரும் உயிரினங்களைக் காக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடல் பசு பாதுகாப்பகம், கழுவேலி பறவைகள் சரணாலயம், அகத்தியா் மலை யானைகள் பாதுகாப்பகம், திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம், 13 ஈர நிலப் பகுதிகளை ராம்சாா் சாசனப் பகுதிகளில் இடம்பெறச் செய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை தெரிவித்துள்ளது.
ENGLISH
  • Devang are nocturnal mammals. They are small in size and belong to woody species. This species is beneficial to farmers by hunting pests that damage crops.
  • Thus, devangs play an important role in ecological and terrestrial ecosystems. The International Center for Conservation of Nature has listed the Dewang as an endangered species.
  • By improving the habitat of these species, protecting them and mitigating the threats to them, the population of Dewang can be increased.
  • To protect the endangered Devangs, 11,806 hectares of forest areas in Karur and Dindigul districts have been identified as their critical habitat.
  • Sensing the immediate need to protect this species, the Tamil Nadu government has announced in the legislative assembly that India's first wildlife sanctuary for Devangs will be set up in Karur and Dindigul districts.
  • In order to implement this notification, 11 thousand 806.56 hectares of land in Karur and Dindigul districts has been declared as a sanctuary by God Devang.
New habitats

  • Like Devang, the Tamil Nadu government has also taken steps to protect many other endangered species. According to the Department of Environment, Climate Change and Forests, steps have been taken to include Sea Cow Sanctuary, Ushveli Bird Sanctuary, Agathiyar Hill Elephant Sanctuary, Tirupur Nanjarayan Kulam Bird Sanctuary and 13 wetlands in the Ramsar Charter.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel