கிஷோரி சக்தி யோஜனா (Kishori Sakthi Yojana) என்பது வளரிளம் பருவப் பெண்களுக்கான இந்திய அரசின் நலத்திட்டம் ஆகும்.
இது முன்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வளரிளம் பருவப் பெண்களுக்கான தேசிய இயக்கம் என்ற பெயரில் அறியப்பட்டது. 2006-07 ஆம் ஆண்டு முதல் இதற்கெனத் தனி நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டம் 11 முதல் 18 வயதுடைய சிறுமியருக்கானது. இத்திட்டத்திற்கென்று புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட மாட்டாது.
ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட வசதிகளைக் கொண்டே இத்திட்டம் நிறைவேற்றப்படும். ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1.1 இலட்ச ரூபாய் ஒதுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வளரிளம் பருவப் பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகப் புரிந்து கொள்தல், சமூகத்தில் தங்கள் கடமையையும் அதை நிறைவேற்ற உதவும் ஆற்றல் மூலங்களை அறிதல், ஊட்டச்சத்துள்ள உணவு உண்ணல், திருமண வயதை அறிதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
ENGLISH
Kishori Sakthi Yojana is a welfare scheme of the Government of India for adolescent girls. It was earlier known as National Movement for Adolescent Girls in Integrated Child Development Programme. A separate fund has been earmarked for this since 2006-07.
This program is for girls aged 11 to 18 years. No new infrastructure will be created for this project.
The scheme will be implemented with the existing Integrated Child Development Scheme facilities. 1.1 lakh will be allocated for an integrated child development programme.
Under this program, adolescent girls will be trained to understand the changes in their body, to know their duty in the society and the sources of energy to help them fulfill it, to eat nutritious food, to know the age of marriage.
0 Comments