கடந்த 2019, ஜன.27ல் மதுரை எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது செப்டம்பர் 2022க்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டமும் கடந்து விட்டது.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமனம் செய்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் மதுரையைச் சேர்ந்தவர். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக்குழு தலைவராக உள்ளார்.
0 Comments