- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், என்பது தமிழ்நாட்டின் ஆதரவற்ற ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கான திட்டமாகும்.
- இத்திட்டத்திற்கு அன்னை தெரேசா நினைவாக, பெயரிடப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
- இத்திட்டத்தில் தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு மட்டும் திருமண உதவி தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பெண்ணின் வயது 18 முடிந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை.
- உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன் பெண்ணின் திருமண அழைப்பிதழ், சட்ட மன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கவேண்டும். அல்லது தாய் தந்தையரின் இறப்பு சான்றிதழையும் வழங்கலாம்.
- பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவைகளை இணைத்து, திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னர் திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை தங்கள் வாழும் பகுதியின் மாநகராட்சி ஆணையர் அல்லது நகராட்சி ஆணையர் அல்லது ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.
திட்டம் 1
- கல்வித் தகுதி ஏதுமில்லை. இவர்களுக்கு மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக ரூபாய் 25,000 தொகை, தாலிக்கு 8 கிராம் தங்க நாணயம் வழகப்படும்.
- பட்டதாரிகள் எனில் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- இவர்களுக்கு மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக ரூபாய் 50,000 தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்
0 Comments