மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் – ஹட்கோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Union Ministry of Housing and Urban Affairs & HUDCO
2022-23-ஆம் நிதியாண்டிற்கு முக்கிய இலக்குகள் நிர்ணயிக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹட்கோ கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, ஹட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு கம்ரான் ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் திரு சுரேந்திர குமார் பாக்டே, ஹட்கோ இயக்குநர் (கார்ப்பரேட் திட்டமிடல்) திரு எம் நாகராஜ், இயக்குநர் (நிதி) திரு டி குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
0 Comments