மழைக்காலக் காற்று மற்றும் பிற காலநிலை காரணிகள் மற்றும் இந்த இயற்கை கூறுகள் தாக்கத்தை ஏற்படுத்திய விதங்கள், வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, 2014 ல் கத்தாரின் தோஹாவில், நடைபெற்ற யுனெஸ்கோவின் 38வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தில் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் 'மௌசம் - வானிலை ' திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் (ஏஎஸ்ஐ) நிர்வகிக்கப்படுகிறது.
மேலும், ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் இந்த விஷயத்தைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துதல் நோக்கத்துடன், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் புது தில்லியில் உள்ள இந்திய ஹாபிடேட் சென்டரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏஎஸ்ஐ ஏற்பாடு செய்தது.
0 Comments