Recent Post

6/recent/ticker-posts

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா / ONLINE GAMBLING PROHIBITION BILL

  • தமிழக சட்டசபை, 17ம் தேதி துவங்கி, நிறைவடைந்தது. 'ஆன்லைன்' விளையாட்டு தொடர்பான சட்டம் இயற்ற, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், குழு அமைக்கப்பட்டது. 
  • அந்த குழு அளித்த அறிக்கை அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, அரசு முடிவு செய்தது.இதற்காகவும், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 
  • அவசர சட்டத்துக்கு, அக்., 1ல் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்டம், பணம் அல்லது பிற பந்தயப் பொருட்கள் வைத்து, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் நபருக்கு, மூன்று மாதம் வரை சிறை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க, வழிவகை செய்கிறது.
  • ஊடகங்களில் விளம்பரம் செய்யும் அல்லது விளம்பரம் செய்ய காரணமாக இருக்கும் நபருக்கு, ஓராண்டு வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
  • இணையவழி சூதாட்ட சேவை வழங்குகிற நபருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க, சட்டம் வழிவகை செய்கிறது.
  • இது தவிர, தமிழ் பல்கலை துணைவேந்தரை, மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா; 2022ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் தொடர்பான மசோதா உட்பட, 12 மசோதாக்கள், இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel