TAMIL
- பிரதம மந்திரி சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய அரசால் உறுதி அளிக்கப்படும் விபத்துக் காப்பீடு இந்தியா திட்டம் ஆகும்.
- இத்திட்டம் முதன்முதலாக இந்திய அரசின் 2015-ஆண்டு பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் பிப்ரவரி 2015-இல் அறிவிக்கப்பட்டது.
- பின்னர் பிரதமர் நரேந்திர மோதி அவர்களால் 8 மே 2015 அன்று கொல்கத்தாவில் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
திட்டத்தின் அம்சங்கள்
- பிரதம மந்திரி சுரக்ஷா பீமா விபத்த்துக் காப்பீட்டுத் திட்டம் ஆனது 18 முதல் 70 வயது நிரம்பிய, வங்கிக் கணக்கு வைத்துள்ள, இந்தியாவில் வசிக்கும் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு கிடைக்கப் பெறும் திட்டமாகும்.
- வருடத்திற்கு சந்தா ரூ.12-வரிகள் இல்லாமல். சந்தா கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சந்தாத் தொகை ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.
- விபத்துக் காப்பீட்டுத் திட்டமானது சூன் 1-ஆம் தேதியிலிருந்து மே 31-ஆம் தேதிவரை காப்பீடு அளிக்கக்கூடிய திட்டமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும்.
- விபத்தினால் உயிரிழப்பு அல்லது முழு உடற்பாக செயலிழப்பு ஏற்படின் ரூ. 2 லட்சமும் பகுதி உடற்பாக செயலிழப்பு ஏற்படின் ரூ. 1 லட்சமும் காப்பீடாக வழங்கப்படும்.
- முழு உடற்பாக செயலிழப்பு என்பது இரண்டு கண்களும் அல்லது கைகளும் அல்லது கால்களும் செயல்பட முடியாமல் போதல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
- பகுதி நிரந்தர உடற்பாக செயலிழப்பு என்பது ஒரு கண், கை அல்லது கால் பயன்படுத்தப்பட முடியாமல் போதல் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்கொலை, குடிப்பழக்கத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது போதை மருந்துகளால் ஏற்படும் இறப்புகளுக்கு காப்பீடு வழங்கப்படாது.
- வங்கிக் கணக்கு வைத்துள்ள எவரும் இணைய வழி வங்கிச் சேவையின் மூலம் வருடத்தின் எந்தக் காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்.
- Pradhan Mantri Suraksha Bhima Accident Insurance Scheme is an Accident Insurance India scheme guaranteed by the Government of India.
- The scheme was first announced in February 2015 by Union Finance Minister Arun Jaitley during the 2015 Budget speech of the Government of India. It was then formally inaugurated by Prime Minister Narendra Modi on 8 May 2015 in Kolkata.
Features of the project
- Pradhan Mantri Suraksha Bhima Accident Insurance Scheme is a scheme available to Indian citizens between 18 to 70 years of age, having a bank account, resident in India or resident abroad.
- Subscription Rs.12 per year—excluding taxes. GST on subscription fee. Exempted from tax. The subscription amount is taken directly from the bank account every year. The accident insurance plan is offered by public sector insurance companies as an insurable plan from 1st June to 31st May.
- In case of death or total disability due to accident Rs. 2 lakhs in case of partial physical failure Rs. 1 lakh will be provided as insurance. Total disability is defined as loss of function of both eyes or arms or legs.
- Partial permanent disability is also defined as the loss of the use of an eye, arm or leg. Insurance does not cover suicides, deaths caused by alcoholism or deaths caused by drugs.
- Anyone having a bank account can join the scheme through internet banking at any time of the year.
0 Comments