Recent Post

6/recent/ticker-posts

இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் / Scheme for supply of free cooking gas connections and gas stoves

  • தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.
பயன்பெற தகுதிகள்
  • பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
  • அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
  • குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வரவேண்டும்.
  • பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்யப் பயன்படுத்த வேண்டும்.
  • எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவம்
  • இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று குடும்ப அட்டையின் நகலையும், தேவையான சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel