Recent Post

6/recent/ticker-posts

சிறந்த கோல்கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், சவிதா தேர்வு / Sreejesh and Savitha are selected as the best goalkeepers

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். 
  • இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு ஸ்ரீஜேஷ் தொடர்ச்சியாக 2-வது முறையாக தேர்வாகி உள்ளார். மகளிர் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக இந்திய அணியின் சவிதா பூனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான வாக்கெடுப்பில் சவிதா 37.6 புள்ளிகள் பெற்றார். அர்ஜென்டினாவின் பெலன் சுசி 26.4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியாவின் ஜோஸ்லின் பார்டம் 16 புள்ளிகளையும் பெற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel