TAMIL
- சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது.
- இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
- திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும்.
- மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம்.
- ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
- முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- ஒரு பெண் குழந்தைக்கு வயது 10 அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.
- ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
- பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.
- ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.
- Sukanya Samriddhi Accounts was launched by Prime Minister of India Narendra Modi on 22nd January 2015. It is a savings plan for future projects like higher education of girls, marriage etc.
- The Selva Daughter Savings Scheme of the Government of India was created as a savings scheme for the development of girl children.
- Under the scheme, girls under 10 years of age can open an account in their name at post offices or banks by their parents or guardians by paying a minimum amount of Rs 1000.
- A minimum of Rs 1000 should be paid into this account every financial year. Payment is to be made for a total of 14 years or till the girl gets married. A minimum of Rs.1000 to a maximum of Rs.150000 as deposit can be paid in a financial year. Interest is paid at 7.6 percent per annum.
- The amount paid into this account in a financial year is exempt from income tax. The maturity amount can be received at the end of 21st year. Also, when the girl turns 18 years old, she can get 50 percent of the amount in the account for her education or marriage expenses.
- A girl child can open an account in her name till she attains the age of 10 years.
- Only one account can be opened per girl child.
- A parent or guardian of a girl child can open an account in their child's name along with the birth certificate.
- Only maximum two girl children in a family can be started under this scheme.
0 Comments