Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசின் முதியோர் உதவித் தொகைத் திட்டம் / TAMILNADU GOVERNMENT OLD AGE GRANT SCHEME

TAMIL
  • ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.
  • தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவித் திட்ட பயனாளிகள்
  • 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டுமின்றி
  • ஆதரவற்ற விவசாயக் கூலிகள்
  • உடல் ஊனமுற்றோர்
  • ஆதரவற்ற விதவைகள்
  • கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கும் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • உதவித்திட்டத்தின் படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000/- தவிர, மாதந்தோறும் ரேஷன் கடையில் 4 கிலோ அரிசியும், (அரசாணை பல்வகை எண் 771 சமூக நலத்துறை நாள் :6.10.80) பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவசமாக வேட்டி / சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. (அரசாணை பல்வகை எண் 995 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.7.79).
  • தற்போது தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி, 2009 – 2010 முதல் இந்திய அரசு வழங்குவதால், இத்திட்டத்திற்கு தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Scheme) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்ன பூர்ணா திட்டத்தின் கீழ் இந்திய அரசு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது.
ENGLISH
  • Tamil Nadu Government Senior Citizen Assistance Scheme is a scheme implemented by the Government of Tamil Nadu to alleviate the misery of the elderly who live in destitute condition.
  • In Tamil Nadu, a scheme called "Tamil Nadu Senior Citizens Scholarship Scheme" was established from 1.4.1962 with the aim of helping the elderly who are unable to work and earn income due to old age, are in need of support from their relatives and have no means of food. 62 was initiated by the Government. 
  • When the scheme was launched, old age pension was given at the rate of Rs.20/- per month. This grant has been gradually increased and now Rs.1,000/- per month is being provided.
Old Age Assistance Scheme Beneficiaries
  • Not only for seniors above 65 years
  • Unsupported agricultural labourers
  • Physically handicapped
  • Destitute widows
  • The Tamil Nadu Senior Citizens Scholarship Scheme has also been extended to wives abandoned by their husbands.
  • Apart from the stipend of Rs.1000/- provided under the scheme, 4 kg of rice is provided in the ration shop every month (Government Variety No. 771 Social Welfare Department dated:6.10.80) free Vetti / Saree for Pongal and Diwali festivals. (Ordinance Miscellaneous No. 995 Finance (Pension) Department Dated:18.7.79).
  • Currently, since the Government of India is providing financial support for the Tamil Nadu Senior Citizens Scholarship Scheme from 2009-2010, the scheme has been renamed as National Social Assistance Scheme. Also under the Anna Purna scheme, the Government of India is providing 10 kg of free rice every month.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel