TAMIL
- தெலுங்கு கங்கைத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்திலுள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்ட நதிநீர் வழங்கல் திட்டம் ஆகும்.
- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் பெறப்படுவதால், இத்திட்டம் கிருஷ்ணா நதிநீர் வழங்கல் திட்டம் (அ) கிருஷ்ணா நதிநீர் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், சென்னை நோக்கி திருப்பிவிடப்பட்டு, 406 கிமீ தொலைவுக்கும் மேல் ஒன்றோடொன்று இணைந்த கால்வாய்கள் மூலம் சென்னைக்கு அருகில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைகிறது.
- ஸ்ரீசைலம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பென்னார் பள்ளத்தாக்கில் உள்ள சோமசீலா அணை மற்றும் கண்டலேறு அணை வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயிண்ட் வந்தடைந்து, அங்கிருந்து பூண்டி ஏரி (அ) சத்திய மூர்த்தி சாகர் வந்தடைகிறது.
- பூண்டி ஏரியிலிருந்து, இணைப்புக் கால்வாய்கள் மூலம் மற்ற ஏரிகளான புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகியவற்றுக்குத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டுக்கும், கிருஷ்ணா ஆறு பாயும் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் கர்நாடகம் அகியவற்றுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, 1977 ஆம் ஆண்டு இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு மாநிலமும் அண்டுக்கு 5 ஆயிரம் மில்லியன் கன அடி(5 டி.எம்.சி) நீர் வீதம், மொத்தம் 15 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும். 1983 ஆம் ஆண்டு, நீரின் அளவு 12 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டது.
- முதலில் தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நீரின் அளவு 0.5 டிஎம்சிக்கும் குறைவாக இருந்ததால், இத்திட்டம் ஏமாற்றம் அளிக்கக்கூடியதாய் இருந்தது.
- 2002 ஆம் ஆண்டு, ஆன்மீகத் தலைவரான சத்ய சாய் பாபா, கால்வாயின் கரைகளை பலப்படுத்தி மறுசீரமைக்கும் தனியார் பங்களிப்புக்கானத் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
- கால்வாயும், பல நீர்த்தேக்கங்களும் மறுகட்டமைக்கப்பட்டு, அத்திட்டம் 2004 அம் ஆண்டு நிறைவு பெற்ற பின், கிருஷ்ணா நதிநீர் முத்ன் முறையாக பூண்டி ஏரி வந்தடைந்தது.
- இத்திட்டத்தின் மூலம், 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகருக்கு வழங்கப்பட்ட நீரின் அளவு 3.7 டி.எம்.சி. ஆகும். கரைகள் பலப்படுத்தப்பட்டு மறுகட்டமைக்கப்பட்ட தெலுங்கு கங்கை கால்வாய் சாய் கங்கா என்று அழைக்கப்படுகிறது
- The Telugu Ganges Project is a river water supply project implemented in South India to provide drinking water to the city of Chennai in the Indian state of Tamil Nadu.
- As Andhra State gets its water from the Krishna River, the project is also known as the Krishna River Supply Project (a) Krishna River Project.
- Water drawn from the Srisailam Reservoir is diverted towards Chennai and reaches Bundi Reservoir near Chennai through more than 406 km of interconnected canals. The water released from Srisailam Dam passes through Someseela Dam and Kandaleru Dam in Bennar Valley to reach Zero Point near Oothukottai bordering Tamil Nadu and from there it reaches Poondi Lake (a) Satya Murthy Sagar. From Poondi Lake, water is distributed to other lakes like Puzhal, Cholavaram and Sembarambakkam through link canals.
- The scheme was adopted in 1977 as per an agreement between Tamil Nadu and the Krishna river basin states of Andhra Pradesh, Maharashtra and Karnataka. According to the agreement, each state has to supply 5 thousand million cubic feet (5 TMC) of water per year, for a total of 15 TMC. In 1983, the water level was reduced to 12 TMC.
- The project proved to be a disappointment as initially the amount of water received by the Telugu Ganga Canal project was less than 0.5 TMC. In 2002, spiritual leader Sathya Sai Baba announced a plan for private participation to strengthen and rehabilitate the banks of the canal.
- After the canal and several reservoirs were reconstructed and the project was completed in 2004, the Krishna river flowed into Poondi Lake. Through this scheme, the amount of water supplied to Chennai city in 2006 was 3.7 TMC. is The Telugu Ganga Canal whose banks have been strengthened and reconstructed is called Sai Ganga
0 Comments