உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் / Territorial Integrity of Ukraine: Safeguarding the Principles of the Charter of the United Nations' resolution
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போருக்குப்பின், உக்ரைனின் சில பகுதிகளான டோனட்ஸ்க், கெர்ஸன், லுஹன்ஸ்க், ஜபோரிஹியா ஆகிய பகுதிகளை இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த இணைப்பு சட்டவிரோதம் என உக்ரைன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதையடுத்து, ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வரைவுத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தது சட்டவிரோதமானது எனக் கூறி ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து 'உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு: ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல்' தீர்மானம் முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதராவாக ஐ.நா. சபையில் 143 நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன.
இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன
0 Comments