தீன் தயாள் துறைமுகத்தின் துனா – தெக்ரா சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves development of Tuna – Thegra cargo terminal at Deen Dayal Port
அரசு – தனியார் –பங்கேற்பு முறையின் கீழ், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் அடிப்படையில் தீன் தயாள் துறைமுகத்தின் துனா – தெக்ரா சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
சலுகை உரிமையின் ஒரு பகுதியாக இதன் மதிப்பீட்டுச் செலவு ரூ.4243.64 கோடியாக இருக்கும். பொதுப் பயன்பாட்டு வசதிகள் மேம்பாட்டுக்கான செலவு ரூ.296.20 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது சரக்கு பெட்டக போக்குவரத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கும்.
துனா – தெக்ராவின் அதிநவீன சரக்கு பெட்டக முனையத்தின் மேம்பாடு காரணமாக 2025 முதல் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சரக்கு பெட்டக முனையங்களிலிருந்து 1.88 மில்லியன் சிறு சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் உருவாகும். மேலும், கண்ட்லாவின் வர்த்தக திறனை அதிகரிப்பதோடு பொருளாதாரத்தை ஊக்குவித்து வேலைவாய்ப்பையும் இந்த திட்டம் அதிகரிக்கும்.
0 Comments