அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Minimum Support Price for all Rabi crops for 2023-24
2023-24 சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தி உள்ளது. பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குங்குமப்பூவின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோதுமை, உளுந்து, பயறு, கொள்ளு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு ரூ.110-ம், பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் அதிகரிக்கப்படுகிறது.
0 Comments