ஸ்பெயினில் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் அன்குஷ் பங்கேற்றார்.
அரையிறுதிக்கு எகிப்தின் நடா மெதானியை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தார். இதில் அன்குஷ், டோக்கியோ ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஜப்பானின் சுசாகியை சந்தித்தார்.
போட்டியின் துவக்கத்தில் அன்குஷ் 0-4 என பின்தங்கினார். இதன் பின் அன்குஷை கீழே சாய்த்த சுசாகி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
புதிய சாதனைமல்யுத்த வரலாற்றில் 'கிராண்ட் ஸ்லாம்' சாதனை படைத்த முதல் நட்சத்திரம் என வரலாறு படைத்தார். 17 வயது (3 முறை), 20 வயது (2), உலக சீனியர் சாம்பியன்ஷிப் (3), ஒலிம்பிக் (1) என அனைத்து பிரிவிலும் சாதித்த இவர், தற்போது 23 வயது உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் கைப்பற்றினார்.
மான்சி வெண்கலம்பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் மான்சி பங்கேற்றார். காலிறுதியில் 2-3 என போலந்தின் மாக்டெலினாவிடம் வீழ்ந்தார். இவருக்கு வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசேஜ்' வாய்ப்பு வந்தது.
முதல் போட்டியில் மான்சி 0-6 என சுவீடனின் செசிலியாவை வென்றார். அடுத்து லாட்வியாவின் ராமினாவை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக ராமினா விலகிக் கொள்ள, மான்சிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
அரையிறுதியில் அமன்ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன், காலிறுதியில் தோஷியாவை (ஜப்பான்) 13-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
0 Comments