Recent Post

6/recent/ticker-posts

YOUR PLATFORM இதழ் / YOUR PLATFORM MAGAZINE

  • தென்னக ரயில்வேயுடன் E-Toll Ads Media and Earth & Air நிறுவனம் இணைந்து முதல் முறையாக ரயில்களுக்கான "Your Platform" என்ற இதழை 2022 செப்டம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • லைஃப்ஸ்டைல், ஃபேஷன் ஆகியவற்றிற்கான இதழ் இது. வழக்கமான இதழ்களையே படித்துவரும் பயணிகளுக்கு பயணத்தின்போது புதிதாக படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கான முயற்சி இது. இனிமேல் பயணிகள் தனித்துவமான விஷயங்களை படிக்க முடியும்.
  • பின்வரும் ரயில்களில், 2022 அக்டோபர் 1 (நாளை) முதல் இந்த இதழ் கிடைக்கும். இதுவொரு மாதாந்திர ஸ்மார்ட் இதழ். அச்சு மற்றும் டிஜிட்டல் இதழ்களுக்கு இடையேயான இடைவெளிக்கு பாலமாக இந்த இதழ் அமையும். ஒவ்வொரு பக்கத்திலும் கியூஆர் கோட் இருக்கும். அதை ஸ்கேன் செய்து டிஜிட்டலாகவும் படிக்கலாம். 
  • தென்னக ரயில்வே தொடர்பான கட்டுரைகள் இருக்கும். தென்னக ரயில்வேயின் மரபை அனைத்து பயணிகள் மற்றும் டிஜிட்டல் வாசகர்கள் புரிந்துகொள்ள இந்த இதழ் உதவும். 
  • ஒவ்வொரு மாத இதழிலும் ரயில்வேயை பற்றிய விஷயங்கள் அடங்கிய 4 பக்கங்கள் இடம்பெறும். அதில் புதிய அப்டேட்டுகளை தெரிந்துகொள்ளலாம்.
  • 20 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.ஷிவ் மற்றும் கார்த்திக் பி.எஸ் ஆகியோர் இணைந்து இந்த இதழை நிறுவியுள்ளனர். 
  • வழக்கமான அரசியல், தினசரி, சர்ச்சை செய்திகள் இல்லாத புதிய மற்றும் நேர்மறையான கட்டுரைகளை படிப்பதற்காக இந்த இதழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
  • In-Train இதழின் நோக்கம், அனுபவம், அறிவு மற்றும் பல விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதும், Your Platform மூலம் விளம்பரதாரர்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான இடமும் ஆகும். 
  • பயணிகளை இணைக்க மற்றும் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வதற்கான புதிய வழியின் தொடக்கம் தான் இது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel