Recent Post

6/recent/ticker-posts

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு / SUPREME COURT VERDICT FOR EWS

TAMIL
  • இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27%, தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்சி) 15%, பழங்குடியினருக்கு (எஸ்.டி) 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019-ல் நிறைவேற்றியது.
  • இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன.
  • 2020-ம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
  • இதன்படி, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
  • அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த செப். 27-ல் நிறைவடைந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறும் நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்தி வாலா ஆகியோர், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
  • ஆனால், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அவர்கள், அரசியலமைப்பின் 103-வது திருத்தம் செல்லாது என்று தெரிவித்தனர். 
  • எனினும், இறுதியில் தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறும்போது, "பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்" என்று தீர்ப்பளித்தார்.
ENGLISH
  • India has 27% reservation for Backward Classes (OBC), 15% for Scheduled Castes (SC) and 7.5% for Scheduled Tribes (ST) in education and employment. In this case, the central government passed the 103rd constitutional amendment in 2019, which provides 10 percent reservation for economically weaker sections.
  • More than 100 petitions were filed in the Supreme Court against this. These petitions were heard as a single case. In 2020, a 3-judge bench headed by the then Chief Justice S.A. Bapde heard the case. Later, the case was transferred to a 5-judge constitution bench on August 5 of the same year.
  • According to this, the constitution bench comprising the present Chief Justice U.U. Lalit, Justices Ravindrapat, Dinesh Maheshwari, Bela M. Trivedi and JP Pardiwala heard the case. Arguments from all sides last Sep. Completed on 27 Supreme Court Chief Justice U.U. Lalit is retiring today, and the judgment was given. The verdict was broadcast live.
  • A five-judge bench comprising Justices Dinesh Maheshwari, Bela M. Trivedi and JP Parthi Vala ruled that the amendment would go to the 10 per cent reservation for economically weaker sections.
  • However, Chief Justice U.U. Lalit and Justice Ravindra Bhat gave a different verdict. They declared that the 103rd Amendment of the Constitution was invalid.
  • However, in the end Chief Justice U.U. Lalit said, "According to the judgment given by the majority of judges, the 10 percent reservation will go to the economically weaker sections."

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel