TAMIL
- தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். 108 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை பெறலாம்.
- இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவை மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய்சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்த தானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றாநோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.
- குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.
- Tamil Nadu Government is running free 108 ambulance service. Thousands are benefiting from this. You can avail this free ambulance service by calling the toll free number 108.
- Now with the new free medical consultation service, you can call 104 toll-free and get free medical consultation.
- Citizens can now get free advice on first aid information, medical advice, maternal and child health information, blood donation, eye donation information, infectious and communicable disease information, nutrition information, facilities under the Chief Minister's Extended Health Insurance Scheme.
- Information about hospitals and centers that treat specific diseases, psychiatric counseling, information about HIV, sexually transmitted diseases and doubts can also be asked for clarification.
0 Comments