141 சுரங்கங்களின் மிகப்பெரிய ஏல நடைமுறையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் / Finance Minister Nirmala Sitharaman inaugurated the largest auction of 141 mines
141 சுரங்கங்களின் மிகப்பெரிய ஏல நடைமுறையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். வணிக ரீதியிலான சுரங்க ஏலத்தின் ஆறாவது கட்ட நடைமுறைகளை புதுதில்லியில் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
உலகளவில் எரிசக்திச் செலவு அதிகரித்து வருவதை குறிப்பிட்ட அவர், நிலக்கரி மற்றும் எரிவாயுத் துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மின்உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தற்போது 41 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், நிலக்கரித் துறை இணையமைச்சர் திரு ராவ் சாகிப் தன்வே, நிலக்கரித் துறை செயலாளர் திரு அம்ரித் லால் மீனா, கூடுதல் செயலாளர் திரு நாகராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments