'ரோஜ்கார் மேளா' திட்டத்தின் மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் மோடி வழங்கினார் / Prime Minister Modi issues job orders to 71,000 people in the 2nd phase of the 'Rojkar Mela' scheme
கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.
இதன் பின்னர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்ப அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, 'ரோஜ்கார் மேளா' என்ற பெயரில் 10 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை, கடந்த அக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 'ரோஜ் கார் மேளா' மூலம் 2ம் கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குஜராத் மற்றும் இமாச்சலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்த இரு மாநிலங்களை தவிர, நாட்டின் 45 இடங்களில் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 71,056 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணையை வழங்கினார்.
0 Comments