2022 செப்டம்பர் மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரித்துறையில் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை 2011-12=100) 99.5 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும்.
இந்திய கனிம துறையின் (ஐபிஎம்) தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 2022-23 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் அதே கால கட்டத்தை விட 4.2 சதவீதமாகும்.
செப்டம்பர் 2022-ல் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்களின் உற்பத்தி வருமாறு நிலக்கரி 580 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 27 லட்சம் டன், இயற்கை வாயு (பயன்படுத்தப்பட்டது) 2791 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன், பாக்சைட் 1667 ஆயிரம் டன்கள், குரோமைட் 116 ஆயிரம் டன்கள், தாமிரம் 10 ஆயிரம் டன்கள், தங்கம் 92 கிலோ, இரும்பு தாது 166 லட்சம் டன்கள், காரியம் 22 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 163 ஆயிரம் டன், துத்தநாகம் 45 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 305 லட்சம் டன், பாஸ்போரைட் 150 ஆயிரம் டன்கள், மேக்னசைட் 10 ஆயிரம் டன்கள், வைரம் 70 கேரட்.
இறக்குமதி செய்யப்பட்ட கனிம உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட, இந்த மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது.
0 Comments