Recent Post

6/recent/ticker-posts

2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் / CONSULTATIVE MEETING REGARDING INTERIM BUDGET FOR 2023-24

  • நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்துத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். 
  • அதுபோல், 2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. 
  • இதில், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை வல்லுநர்கள், நிதித்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
  • இதில், பணவீக்க அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடிய சூழல், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் மீளும் பொருளாதாரம், மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. 
  • ஜிஎஸ்டி விதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், தொழில்துறையினருக்கு அளிக்க வேண்டிய சலுகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கூறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்ய உள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel