2023-25 காலகட்டத்திற்கான சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைமை, கேந்திர மேலாண்மை வாரியத் தலைமைப் பொறுப்பை இந்தியா வென்றுள்ளது / India wins International Electronic Technology Commission Vice-Chairmanship, Central Management Board Chairship for 2023-25
2023-25 காலகட்டத்திற்கான சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியையும், கேந்திர மேலாண்மை வாரியத் தலைமையையும் இந்தியா வென்றுள்ளது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் ஆணையத்தின் இந்திய தேசியக் குழு மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின்
பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினரான இந்திய பிரதிநிதி சுமார் 90% உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தின் கொள்கை மற்றும் நிர்வாக அமைப்புகளிலும், சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்திலும் இந்தியாவின் பிரதிநிதித்துவம், முக்கிய கேந்திர மற்றும் கொள்கை சம்பந்தமான விஷயங்களில் இந்தியாவின் கருத்துக்களை முன்னிலைப்படுத்த ஏதுவாக இருப்பது மட்டுமல்லாமல், தேசிய தர முன்னுரிமைகளை சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்பையும் வழங்கும்.
இந்திய பிரதிநிதியான திரு. விமல் மகேந்துரு, சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகிப்பார்.
மின்சாரம், மின்னணு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பாக சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் செயல்படுகிறது.
தர நிர்ணய மேலாண்மை வாரியம் என்பது தொழில்நுட்ப கொள்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆணையத்தின் முக்கிய நிர்வாக அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments