இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் இந்தியாவில் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.
இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்த திட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் கடல் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க கடந்த 18ம் தேதி தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் டெண்டர் அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த ஏலத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 Comments