TAMIL
- ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014 வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.
- இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
- நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை.
- வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
- ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் முப்பதாயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை இந்திய அரசே செலுத்தும்.
- ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- மாநில அரசுத் துறைகளின் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படும்.
- இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிஷான் அட்டைகளை வழங்குவதற்குக் கூட்டுறவு வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
- Prime Minister Narendra Modi on Thursday 28th August 2014 launched a new scheme called Jan Dhan Yojana or Pradhan Mantri Jan Dhan Yojana to have a bank account per household in New Delhi.
- In his Independence Day speech on 15 August 2014, Prime Minister Narendra Modi announced the 'Pradhan Mantri Jan-Than Yojana' (Prime Minister's People's Finance Scheme).
- Under this scheme, 7½ crore unbanked families have been opened bank accounts with insurance facility.
- The scheme was launched in state capitals and major district capitals across the country. Under this scheme, if Aadhaar card is present, no other documents are required to open a bank account. After opening a bank account, they have an ATM. Card will be issued. With it you can withdraw money from ATMs across the country.
- An accident cover of one lakh rupees and a life cover of thirty thousand rupees will be provided. The premium for life insurance is paid by the Government of India. Facilities like pension and insurance will also be provided. Financial assistance provided by central and state governments can be availed through bank account.
- The amount will be transferred immediately to the bank accounts of the beneficiaries of the schemes of the state government departments. Co-operative banks will take necessary steps to issue Rube Kishan cards to farmers under this scheme.
0 Comments