TAMIL
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டது.
- இத்திட்டமானது 2015-16 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள், சுய வேலைவாய்ப்பு திறன் சார்ந்த பயிற்சிகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற பயிற்சிகள். இதில் ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள் மத்திய அரசின் MGNREGS அலகின் நிதி ஆதரவோடு நடத்தப்படுகிறது.
- ஓட்டுநர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடை, விருந்தோம்பல், கட்டுமானம், சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் அழகுக் கலை.
- இப்பயிற்சிகள் DDU - GKY திட்டத்தின் வழிமுறைகளின்படி நிரந்தர பதிவு எண் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பினைக் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
- சுய வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கிகளால் நடத்தப்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI's) மூலமாக வழங்கப்படுகிறது.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திறன் பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் சுய உதவி குழு மற்றும் ஒத்த தொழில் குழுக்களில் உள்ள தனி நபரின் தேவைக்கிணங்க வழங்கப்படுகிறது.
- இதன் தொடக்கமாக நீடித்த நிலைத்த வேளாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
- This training program is designed to generate permanent income for the beneficiary families of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme. This scheme has been implemented in the state since 2015-16.
- Wage employment training, self employment skills training and livelihood development training. In which wage-based employment training is conducted with the financial support of the MGNREGS unit of the Central Government.
- Driving Training, Information Technology, Garments and Readymade Garment, Hospitality, Construction, Healthcare, Retail and Beauty Arts.
- These trainings are offered through training institutes with permanent registration number and better infrastructure as per DDU - GKY scheme guidelines.
- Trainings for self-employment are provided through Rural Self-Employment Training Institutes (RSETI's) run by Pioneer Banks in respective districts.
- Skill trainings under the Tamil Nadu State Rural Livelihoods Movement are provided as per the requirement of individual in Self Help Group and similar vocational groups.
- To begin with, families engaged in sustainable agriculture are provided with training on vermicomposting.
0 Comments