நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் என்ற மலைப் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் வசித்தனர்.
இந்த பகுதி தற்போது, குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ளது. இங்கு வசித்த பழங்குடியினர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வந்தனர்.
கடந்த 1913 நவ., 17ல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 1,500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்த இடத்தில், மங்கார் தாம் என்ற பெயரில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பன்ஸ்வாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராஜஸ்தானில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்லப்பட்ட பழங்குடி சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 'மங்கார் தாம்' என்ற நினைவிடத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதில், பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத்தின் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments