ஐ.பி.எல்., 15வது சீசனுக்கான (2022, மே 29) பைனல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது.
மோடி மைதானத்தில் 1,10,00 பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது. இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (1,00,024) விட அதிகம். ஐ.பி.எல்., பைனலை காண 1,01,566 பேர் வந்திருந்தனர்.
இதன்மூலம் அதிகபட்ச ரசிகர்கள் வருகை தந்ததற்காக மோடி மைதானம், உலக சாதனைக்கான 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது.
0 Comments