TAMIL
- ஆண் பெண் குழந்தை விகிதம் [Child Sex Ratio (CSR)] குறைந்திருப்பது கவனத்துக்குரியது. 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தைகளும் பிறந்தன.
- 1991இல் இவ்விகிதத்தில் பெண் குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.
- இந்த விகித வேறுபாடு இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் பாலினத் தேர்வும், பிறப்புக்குப் பின்னர் பெண் சிசுக் கொலையும் ஆகியன அவை.
- ஒருபுறம் பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகக்கட்டமைப்பும், மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டு கொள்ளும் கருவிகள் எளிதில் கிடைப்பதும், வாங்க முடிவதும், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாக பெண் குழந்தைகள் தேடி அழிக்கப்படுவதனால் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது.
- பெண் குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்பு சங்கமாகக் கூடிய முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” ((BBBP) என்ற திட்டம் ஆண் பெண் குழந்தை விகிதத்தை சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது தேசிய பிரச்சாரம் மூலமாக செயலாக்கப்படுறது. ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 161 மாவட்டங்களை கவனத்தில் கொண்டு, பல அடுக்குச் செயல்திட்டமாக செயலாற்றபடுகிறது.
- இது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த குறிக்கோள்
- பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள்
- ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற அடிப்படையில் 161 மாவட்டங்களை அடையாளம் காண்பது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதியிலிருந்து குறைந்தது ஒரு மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் வீதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று விதிகளாவன:
- தேசிய ஆண் பெண் குழந்தை விகிதத்தைவிட குறைவான விகிதம் உடைய மாவட்டங்கள் (87 மாவட்டங்கள் / 23 மாநிலங்கள்)
- தேசிய ஆண் பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், ஆனால் குறைந்து வரும் தன்மையைக் காட்டுபவை (8 மாவட்டங்கள் / 8 மாநிலங்கள்)
- தேசிய ஆண் பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், மேலும் கூடி வரும் தன்மையைக் காட்டுபவை (5 மாவட்டங்கள் / 5 மாநிலங்கள்). இவை, ஆண் பெண் குழந்தை விகித அளவுகள் பராமரிக்கப்படுவதோடு மற்ற மாவட்டங்களும் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்பற்றி கற்றுக் கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
நோக்கங்கள்
- பாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்
- பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்
செயல் திட்டம்
- பெண் குழந்தைகளுக்கு சமமதிப்பை உருவாக்கவும், அவர்களுக்கு கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருஙகிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- ஆண் பெண் குழந்தை விகிதம் / பால்விகிதச் சமநிலை (SRB) குறைவாக இருக்கின்ற பிரச்சினையை மக்களுக்கு முன் வைத்து, விவாதித்து, எது சரியான தீர்வாகப் பெறப்படுகிறதோ அதனை மேம்படுத்துவது.
- ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களையும் மாவட்டங்களையும் தேர்ந்தெடுத்து, தனி கவனம் செலுத்தி திட்டத்தை செயல்படச் செய்வது.
- பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக விளங்கும் கடைநிலைப் பணியாளர்கள் ஆகியோரைத் திரட்டி, பயிற்சி தந்து, உள்ளுர் / பெண்கள் / இளைஞர் குழுக்களின் உதவியுடன் திட்டமிடுதல்.
- சேவை அமைப்புகள் / திட்டங்கள் / செயல்திட்டங்கள் ஆகியவை பாலின சமநிலையோடு, குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து, போதுமான பொறுப்புடன் செயல்படும் வகையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
- கடைநிலை / ஒன்றிய / மாவட்டம் அளவில் நிறுவனங்களுக்கிடையில் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- It is noteworthy that the Child Sex Ratio (CSR) has decreased. Since 1961, there have been 1,000 female births for every 1,000 male children aged 0-6 years. It is alarming that in 1991 the number of female children decreased to 945, 927 in 2001 and 918 in 2011.
- This ratio difference is due to two reasons. They are sex selection through prenatal diagnosis and female infanticide after birth.
- The male-to-female ratio has declined due to the social structure against girls on one hand, and the easy availability and affordability of prenatal sex-determining devices on the other hand, and the ongoing search and destruction of female children due to their misuse.
- The Government of India has launched a program called “Petipachau Beti Patao” (Let's Protect and Educate the Girl Child) as a collaborative all-society effort to ensure empowerment, security and a normal life for the girl child. The scheme “Beti Bachao Beti Patao” (BBBP) was launched in October 2014 to equalize the male-female ratio.
- It is implemented through a national campaign. It is being implemented as a multi-tiered program focusing on 161 selected districts in all states and union territories where the male-to-female ratio is low.
- It has been launched as a joint initiative of Ministry of Women and Child Development, Ministry of Health and Family Welfare, Ministry of Human Resource Development.
Overall objective
- Celebrating the birth of a girl child and ensuring her education.
Selected Districts
- To identify 161 districts on the basis of low male to female ratio. Cuddalore district has been selected in Tamil Nadu.
- At least one district per state from all the states and union territory should be selected as per 2011 census.
- The three rules for selection of districts are:
- Districts with ratio below national male-female ratio (87 districts / 23 states)
- Districts with ratio higher than National Female Child Ratio but showing declining trend (8 Districts / 8 States)
- Districts with ratio higher than the national male-to-female ratio and showing increasing trend (5 districts / 5 states). These, boy girl child ratio levels are maintained and other districts are selected to emulate and learn from this experience
Objectives
- Fertility should be prevented on the basis of sex selection.
- Ensuring the safety and normal life of the girl child
- Ensuring education for girls
Action plan
- Creating awareness through continuous social integration to create equality and educate the girl child.
- To present the issue of low male to female ratio / low birth rate (SRB) to the public, discuss and promote what is found to be the right solution.
- Select cities and districts with low male-to-female ratio and implement the program with special focus.
- Mobilize and train Panchayat Raj Institutions / Urban Local Bodies / Shopkeepers who act as catalysts for social change and planning with the help of local / women / youth groups.
- Ensure that service systems / programs / programs are gender balanced, protect children's rights and operate with adequate accountability.
- Ensuring inter-organizational collaboration at shop / union / district level.
0 Comments